விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்?
ADDED : 1206 days ago
ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடித்து வெளியான படம் தி லெஜன்ட். தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் இப்படத்தை 2500 தியேட்டர்களில் வெளியிட்டார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே 800 தியேட்டர்களில் வெளியானது. ஆனால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் ஒரே வாரத்தில் இந்த படத்தை பல தியேட்டர்களில் இருந்து எடுத்து விட்டார்கள். இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‛ஊடக நண்பர்களுக்கு வணக்கம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. விரைவில் சந்திக்கிறேன், சந்திக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார் லெஜென்ட் சரவணன். இதையடுத்து தனது அடுத்த பட அறிவிப்பை மீடியாக்களை சந்தித்து வெளியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.