உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல்

ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல்

துல்கர் சல்மான் நாயகனாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. அந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் அவருக்கு கால் பண்ணி பாராட்டியதோடு எனக்கும் ஒரு கதை தயார் செய்யுங்கள். கண்டிப்பாக நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியிருந்தார். அப்படி ரஜினி தனக்கு கால் பண்ணி பேசிய ஆடியோவையும் அந்த சமயத்தில் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் தேசிங்கு பெரியசாமி. இப்படியான நிலையில் அண்ணாத்த படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு ரஜினி தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தேசிங்கு பெரியசாமி அளித்த ஒரு பேட்டியில், ரஜினி எனது இரண்டாவது படத்தில் நடிக்கவில்லை. ஆனால் கண்டிப்பாக எதிர்காலத்தில் நான் ரஜினியை வைத்து படம் இயக்குவேன். அதோடு எனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !