வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம்
ADDED : 1154 days ago
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சீதா ராமம் படம் கடந்த வாரம் வெளியானது. ஹனு ராகவபுடி இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு அழகிய காதல் படத்தை பார்த்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர். படம் வெளியான 3 நாட்களில் 25 கோடி வசூலித்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை வசூல் உச்சகட்டத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் 8 விடுமுறை நாட்கள் இருப்பதால், வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்த வாரம் படம் 100 கோடி கிளப்பில் இணையும் என்கிறார்கள்.