ரஜினியின் ‛ஜெயிலர்' படப்பிடிப்பு துவங்கியதாக தகவல்
ADDED : 1200 days ago
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, ரெடி கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக பிரமாண்ட ஜெயில் செட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மீடியாக்களை சந்தித்த ரஜினிகாந்த், ஜெயிலர் படப்பிடிப்பு 15 அல்லது 22ம் தேதி தொடங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று ஜெயிலர் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளதாகவும், இதில் ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்க போவதாகவும் கூறப்படுகிறது.