பண்ணாரி அம்மன் கோயிலில் வடிவேலு சாமி தரிசனம்
ADDED : 1199 days ago
சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ் பெற்ற பன்னாரி அம்மன் கோயிலுக்கு நடிகர் வடிவேலு திடீரென வருகை தந்தார். அங்கு அவர் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியில் வந்த வடிவேலுவுடன் போட்டோ எடுத்துக்கொள்ள பொதுமக்கள் முண்டி அடித்தனர். அப்போது வடிவேலு கோயில் துப்புரவு பணியாளர்களை அருகே அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். மைசூரு வனப் பகுதியில் நடக்கும் படப்பிடிப்புக்காக திம்மம் மலைப்பாதை வழியாக சென்றபோது பண்ணாரி அம்மனை தரிசிக்க விரும்பி வந்ததாகவும் அவர் கூறினார்.