இந்தியா - விண்டீஸ் கிரிக்கெட்டில் இடம் பெற்ற சமந்தாவின் பாடல்
ADDED : 1198 days ago
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் வெளியானது. இந்த படம் அல்லு அர்ஜுனுக்கு அவரது பயணத்தில் இன்னும் கூடுதல் மைலேஜ் கொடுத்துள்ளது ஒரு பக்கம் இருக்க, அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகாவும் ஒரு பாடலுக்கு ஆடிய சமந்தாவும் கூட ரசிகர்களிடம் இன்னும் அதிக வரவேற்பு பெற்றனர்.
இந்தநிலையில் தற்போது புளோரிடாவில் நடைபெற்ற இந்திய - விண்டீஸ் அணிகளுக்கான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ஸ்டேடியத்தில் சமந்தா நடனமாடிய ‛ஓ ஆண்டவா' பாடலை ஒலிக்கவிட்டு ரசிகர்கள் நடனமாடி உள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.