சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் இளவரசு
ADDED : 1198 days ago
வெள்ளித்திரையில் ஒளிப்பதிவாளராகவும், குணச்சித்திர நடிகராகவும் கலக்கி வரும் மூத்த நடிகரான இளவரசு, தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். மிக விரைவில் 'ஆனந்தராகம்' என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடரில் ஹீரோயினுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இளவரசு நடித்து வருகிறார். மேலும், அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை வினோதினியும் நடிக்கிறார். இந்த தொடரின் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. மிக விரைவில் இந்த சீரியல் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவுள்ளது.