உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் பெண்களுக்கு மதிப்பில்லை - தமன்னா

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பில்லை - தமன்னா

நடிகை தமன்னாவிற்கு தமிழில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் இவர் கூறுகையில், ‛‛சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதி கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை. போஸ்டர்களில் ஹீரோயின்கள் வருவதே பெரிய விஷயம். புரொமோஷன்சகளுக்கு ஹீரோ வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும், ஹீரோயின்கள் வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும் விமர்சிப்பர். இந்த நிலைமை எல்லாம் எப்போது மாறும் என தெரியவில்லை'' என தனது ஆதங்கத்தை தமன்னா வெளிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !