இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி
ADDED : 1148 days ago
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அதன் பிறகு இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாகிறது. இந்த நேரத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், உயிருக்கு போராடும் சரத்குமாரை மருத்துவமனைக்குள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியில் விஜய், பிரபு ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளார்கள். இதை மருத்துவமனையில் படமாக்கிக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் ரகசியமாக தனது மொபைலில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்கள்.