நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : 1243 days ago
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் நாசர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் போலீஸ் அகாடமியில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்று இருந்தார் நாசர். அப்போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்பின் போது அவர் காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த படப்பிடிப்பின் போது நடிகை சுஹாசினி, நாயகி மெஹ்ரீன், நடிகர் சியாஜி ஷிண்டே ஆகியோரும் உடன் இருந்தார். நாசர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாசர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மனைவி கமீலா தெரிவித்துள்ளார்.