ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன்
ADDED : 1242 days ago
பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று பரவலாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கில் தான் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக அனுபவம் பரமேஸ்வரன் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான கார்த்திகேயா 2 என்ற படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த ஹிட்டுக்கு பிறகு ஒரு பாலிவுட் படம் நிறுவனம் அனுபமாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால் கூடிய சீக்கிரமே அனுபமா மும்பை சென்று அந்த படத்தில் ஒப்பந்தமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.