உலகின் 100 அழகான முகங்கள்: லட்சுமி மஞ்சு இடம் பிடித்தார்
ADDED : 1240 days ago
உலக புகழ்பெற்ற டி.சி காலண்டர் நிறுவனம் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தி அவ்வப்போது புள்ளி விபரங்களை வெளியிடும். அந்த வரிசையில் தற்போது உலகின் அழகான 100 பெண்களின் முகங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை லட்சுமி மஞ்சு இடம்பிடித்துள்ளார்.
பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் இருக்கிறார். தந்தை மோகன் பாபுவுடன் இணைந்து 'அக்னி நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். பிரதீக் பிரஜோஷ் இயக்கியுள்ள இப்படம் தற்போது தயாரிப்பில் உள்ளது.
மோகன்லாலுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்குமுன் கடல், மயங்கினேன் தயங்கினேன், காற்றின் மொழி ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது புதிய தமிழ் படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.