‛கெட்ட குணம் கொண்டவர்கள்': திரிஷா குறிப்பிடும் நபர் யார்?
ADDED : 1188 days ago
நடிகை திரிஷா அரசியலில் ஈடுபட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு அவர் தேசிய கட்சியான காங்கிரசில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை திரிஷாவின் தாயார் மறுத்துள்ளார். திரிஷாவுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை என்றும் அவர் குறித்து பரவும் இந்த தகவல் வெறும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சி மற்றும் குழப்பமடைய செய்துள்ளது. அவரது பதிவில், ‛கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது ஒரு நல்ல விஷயமாக பார்க்கவேண்டும். ஒரு குப்பை தன்னைத்தானே வெளியேறி கொள்வதைப் போன்றது எனப் பதிவிட்டுள்ளார். யாரை மனதில் வைத்து அவர் இதை பதிவு செய்துள்ளார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுபு்பியுள்ளனர்.