ஜூனியர் என்டிஆருக்கு அழைப்பு விடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
ADDED : 1142 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தை சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்த்து ரசித்துள்ளார். அப்போது ஜூனியர் என்டிஆரின் அற்புதமான நடிப்பால் அவர் ஈர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் ஐதராபாத்துக்கு வந்துள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. அதையடுத்து இரவு தான் தங்கி இருக்கும் தனியார் ஓட்டலுக்கு வந்து இரவு 7:30 மணிக்கு தன்னை சந்திக்குமாறும், இரவு தன்னுடன் உணவு அருந்துமாறும் ஜூனியர் என்.டி.ஆருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த தகவல் டோலிவுட் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.