பவன் கல்யாணின் முதல் பான் இந்தியா படம்: அடுத்தாண்டு மார்ச் 30ல் ரிலீஸ்
ADDED : 1188 days ago
தெலுங்கில் கிரிஸ் ஜகர்ல முடியின் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள பீரியட் படம் ‛ஹரிஹர வீரமல்லு' பான் இந்தியா படமாக ஆக்சன் கதையில் உருவாகிவரும் இந்த படத்தில் நிதி அகர்வால் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறுகையில், ஹரிஹர வீரமல்லு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படம் பவன் கல்யாணின் கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். விரைவில் படப்பிடிப்பு முடியவிருப்பதால் இந்த படத்தை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.