தற்காப்பு கலை கற்கும் சமந்தா
ADDED : 1182 days ago
சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்துள்ளார் சமந்தா. இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. ‛தி பேமிலிமேன்' வெப்சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் பிரபலமான சமந்தா தற்போது ஹிந்தியில் மீண்டும் ஒரு வெப்சீரிஸில் நடிக்கிறார். ராஜ் டிகே இயக்க, வருண் தவான் நாயகனாக நடிக்கிறார். இந்த சீரிஸில் சமந்தாவிற்கு ஆக் ஷன் காட்சிகள் உள்ளன. இதனால் தற்காப்பு கலைக்கான பயிற்சியினை சமந்தா தற்போது மேற்கொண்டு வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.