அமுதை பொழியும் நிலவே... 'பி சுசீலா 70' - சென்னையில் கொண்டாட்டம்
ADDED : 1135 days ago
பிரபல பின்னணி பாடகி பி சுசீலாவின் 70 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்வை தினமலர் நாளிதழ் இணைந்து வழங்கியது. விழாவில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல் ஆதி மூலம், பழம்பெரும் நடிகைகள் பாரதி, சச்சு, கே ஆர் விஜயா, காஞ்சனா, வெண்ணிறாடை நிர்மலா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னணிப் பாடகர்கள் சித்ரா, எஸ்பிபி சரண், உன்னி மேனன், ஸ்வேதா மோகன், முகேஷ், அனந்தூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பி சுசீலா அவர்களின் பாடல்களை பாடி மகிழ்வித்தனர்.
விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து பி சுசீலாவிற்கு இசை அரசி பட்ட வழங்கி கவிதை ஒன்றையும் வாசித்தார். நடிகை கே ஆர் விஜயா, சுசீலாவிற்கு கிரீடம் சூட்டி மகிழ்வித்தார்.