உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்கள் தொல்லையால் மதுவுக்கு அடிமையானேன் - நடிகை பகீர்

ரசிகர்கள் தொல்லையால் மதுவுக்கு அடிமையானேன் - நடிகை பகீர்

தமிழில் நட்பதிகாரம் 79 படத்தில் நடித்த தேஜஸ்வி மடிவாடா தெலுங்கில் பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ‛‛பெண்களுக்கான பாலியல் தொல்லை சினிமா மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் நான் கூட இதுமாதிரியான பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன்'' என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் தொல்லையால் மது பழக்கத்தில் அவதிப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‛‛பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ஒரு போட்டியாளராக பங்கேற்றேன். அப்போது நடிகர் கவுஷலின் ரசிகர்கள் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை பரப்பினர். இந்த மன உளைச்சலில் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !