‛பார்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1150 days ago
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் பார்டர். ரெஜினா, ஸ்டெபி பட்டேல் நாயகிகளாக நடித்துள்ளனர். ராணுவ பின்னணியில் உளவு கதையாக அதிரடி படமாக இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. தொடர்ந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 5ம் தேதி படம் தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.