சம்பளத்தை உயர்த்திய சமந்தா
ADDED : 1150 days ago
நடிகை சமந்தா தற்போது ‛யசோதா, சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்படியாக ஹிந்தியில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். ராஜ் - டீகே இயக்குகின்றனர். வருண் தவான் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இதுநாள் வரை ரூ.2 முதல் 2.50 கோடி சம்பளம் வாங்கி வந்த சமந்தா தற்போது 1 கோடி உயர்த்தி ரூ.3.50 கோடி சம்பளம் கேட்கிறாராம். புஷ்பா பாடலுக்கு பின் கிடைத்த வரவேற்பாலும் தற்போது ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளதாலும் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஹிந்தியில் நடிப்பதால் தென்னிந்திய படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை சமந்தா. இனி தான் நடிக்க போகும் படத்திற்கு ரூ.3.5 கோடி தான் சம்பளம் நிர்ணயித்துள்ளாராம்.