வீஜே பப்புவின் பிறந்தநாளை கொண்டாடிய சினிமா பிரபலங்கள்!
ADDED : 1235 days ago
சின்னத்திரையில் விஜய் டிவியின் மூலம் வீஜேவாக அறிமுகமானவர் பப்பு. தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த அவர் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அதிலும், சமீபத்தில் வெளியான தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படக்குழுவினர் ஒன்றாக சேர்ந்து பப்புவின் பிறந்தநாளை கொண்டாடிவுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பப்பு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ், இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் மற்றும் நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் பப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் பப்புவின் இந்த பாசிட்டிவான வளர்ச்சியையும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.