மேலும் செய்திகள்
மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ்
1122 days ago
200 படங்களை கடந்த 2025
1122 days ago
முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி
1122 days ago
அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி
1122 days ago
மலையாளத்தில் அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஓட்டு. தமிழில் இந்த படம் ரெண்டகம் என்கிற பெயரில் வெளியாகிறது.. அரவிந்த்சாமி 25 வருடங்கள் கழித்து மலையாளத்தில் நடித்திருப்பதும், குஞ்சாக்கோ போபன் முதன்முறையாக இந்த படம் மூலம் தமிழுக்கு வருவதும் என சிறப்புகள் கொண்ட இந்த படம், அரசியல் பின்னணியில் கேங்ஸ்டர் பாணியில் உருவாகியுள்ளது. டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி என்கிற படத்தை இயக்கிய டிபி பெலினி என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுதும் ஒரே சமயத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேறொரு தேதிக்கு மாற்றி வைக்கப்பட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கான வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் இந்தப் படம் தள்ளி வைக்கப்படுகிறது என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
1122 days ago
1122 days ago
1122 days ago
1122 days ago