காதலி பென்சியாவை மணந்தார் புகழ்
ADDED : 1150 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். தொடர்ந்து திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு ஜூ கீப்பர் என்ற படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியை சேர்ந்த உமர் - பரித்தா தம்பதியரின் மகள் பென்சியா என்பவரை காதலித்து வந்தார் புகழ். இந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று இவர்களின் திருமணம், திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யா மொழி விநாயகர் கோயிலில் இந்து முறைப்படி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார், மதுரை முத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். புகழ் - பென்சியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற ஐந்தாம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.