மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1126 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1126 days ago
நடிகர் விக்ரம் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் 'கோப்ரா'. டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருந்தது . நடிகர் விக்ரம் 9 வேடங்களில் நடித்திருந்தார் .
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேபோன்று படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்று படக்குழு எதிர்பார்த்த நிலையில் பின்னடவை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் விக்ரம் நடிப்பில் அசத்தியிருந்தாலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக பெரும்பாலான விமர்சகர்கள், ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இதை கவனித்து வந்த படக் குழுவினர், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று படத்தின் நீளத்தில் 20 நிமிடங்கள் குறைத்துள்ளனர். இன்று(செப்., 1) மாலை முதல் குறைக்கப்பட்ட காட்சிகளுடன் அனைத்து ஊர்களிலும் படம் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1126 days ago
1126 days ago