மிர்ச்சி சிவாவின் 'காசேதான் கடவுளடா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1129 days ago
காமெடி கதைக்களங்களில் நடித்து வரும் நடிகர் மிர்ச்சி சிவா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. பழம்பெரும் நடிகர் முத்துராமன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற நகைச்சுவை படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது. ஆர்.கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கப்பட்ட தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகின்ற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது.