முதல் பாகம் வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாம் பாகம்
ADDED : 1177 days ago
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. அந்த டிரைலரின் முடிவில் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் விழாவில் பேசிய கவுதம் மேனன், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை முடிவு செய்துவிட்டதாகவும், முதல் பாகம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் தெரிவித்தார். அதனால் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாம் பாகம் உருவாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.