தனுஷை சந்தித்த பிரியாமணி, ஜெனிலியா, ரித்தேஷ்
ADDED : 1131 days ago
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மும்பைக்கு சென்ற நடிகர் தனுஷ் அங்கு நடிகைகள் பிரியாமணி , ஜெனிலியா மற்றும் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோரை சந்தித்து உள்ளார். இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷ் உடன் உத்தமபுத்திரன் படத்தில் ஜெனிலியாவும், அது ஒரு கனா காலம் படத்தில் பிரியாமணியும் நாயகியராக நடித்தது குறிப்பிடத்தக்கது.