நானே வருவேன் படத்தின் ஒன்லைனை வெளியிட்ட தனுஷ்
ADDED : 1185 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‛நானே வருவேன்'. எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் நிலையில் செப்டம்பர் மாதம் இறுதியில் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பதிவு போட்டுள்ளார் தனுஷ். அதில், ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம். ஒரு ராஜா நல்லவராம் , இன்னொரு ராஜா கெட்டவராம் என்று பதிவிட்டுள்ளார். இதைவைத்து பார்க்கும் போது இந்த படத்தில் தனுஷ் ஹீரோ - வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.