ஓடும் ஆற்றை பைக்கில் கடந்த அஜித் - வைரலான வீடியோ
ADDED : 1140 days ago
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். அஜித்தின் 61வது படமாக உருவாகும் இதில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் அஜித் லடாக் பகுதியில் பைக்கில் தனது நண்பர்கள் குழுவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பைக்கில் காடு மலைகளில் செல்வது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. மேலும் ஒரு சில நாட்களுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியரும் இந்த குழுவில் இணைந்து பைக் பயணம் சென்றார். இந்த நிலையில் அஜித் லடாக்கில் உள்ள கரடு, முரடான சாலைகளில் பைக்கில் ஆற்றை சுலபமாக கடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.