நான் முயற்சி பண்ணேன், மணிரத்னம் பூர்த்தி பண்ணிவிட்டார் : கமல்
ADDED : 1176 days ago
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. முதல்பாகம் செப்., 30ல் திரைக்கு வர உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இசை மற்றும் டிலைர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்றனர். டிரைலரை வெளியிட்டு கமல் பேசியதாவது : ‛‛பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் வாங்கி வைத்த படம். அவரிடமிருந்து நான் வாங்கினேன். அப்போது அவர் சீக்கிரம் எடுத்துரு என்று சொன்னார். பிறகு என்னிடமிருந்து நிறைய பேரிடம் இந்த கதை போனது. நான் முயற்சி பண்ணேன், மணிரத்னம் அதை பூர்த்தி பண்ணிவிட்டார். ரஹ்மானின் இசை சிறப்பாக உள்ளது'' என்றார்.