பரதநாட்டியத்தில் 'டிப்பம் டிப்பம்' பாடலுக்கு அதிரடி ஆட்டம் ஆடிய நீபா - அசார்
ADDED : 1123 days ago
சின்னத்திரை நடிகையான நீபா திறமையான நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. திருமணத்திற்கு பின் சில நாட்கள் ஊடக வெளிச்சத்துக்கு இடைவெளி விட்டிருந்த நீபா தற்போது சீரியல்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மறுபடியும் பரதநாட்டியம், வெஸ்டர்ன் நடனத்திலும் கலக்கி வருகிறார். இதன் மூலம் பழைய பிட்னஸூக்கு திரும்பியுள்ள நீபா, முன்னைவிட இப்போது நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரபல கொரியோகிராபரான அசார் என்பவருடன் சேர்ந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் குத்துப்பாடலான 'டிப்பம் டிப்பம்' பாடலுக்கு பரதநாட்டிய அசைவுகளை போட்டு அசத்தியுள்ளார். மிகவும் வேகமாக சுழன்று ஆடும் நீபா மற்றும் அசாரின் நடனம் தற்போது பலரது கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.