பாரதிராஜாவிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
ADDED : 1168 days ago
இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீர்சத்து குறைபாடு மற்றும் சளி தொந்தரவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் ஒருவாரத்திற்கு பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சென்னை, நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் பாரதிராஜா ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிலநாட்கள் ஓய்வில் இருக்கும் பாரதிராஜா விரைவில் சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.