விக்ரம் 61 - எப்போது ஆரம்பம்
ADDED : 1167 days ago
நட்சத்திரம் நகர்கிறது படத்தை தொடர்ந்து விக்ரமின் 61 ஆவது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் பா. ரஞ்சித் . தற்போது அப்படம் குறித்து அவர் ஒரு அப்டேட் வெளியிட்டு உள்ளார். அதில், விக்ரம் 61 வது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படம் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு சுவாரஸ்யமான கதையில் உருவாகிறது என்று தெரிவித்திருக்கிறார். ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பதாக தெரிவித்திருக்கிறார்.