உலக அளவில் கோவை தியேட்டரில் 'விக்ரம்' அதிக வசூல் சாதனை
ADDED : 1166 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'விக்ரம்' படம் 100 நாட்களைக் கடந்து 500 கோடி வசூலையும் கடந்தது.
உலக அளவில் இப்படம் கோவையில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பிரபல கேஜி சினிமாஸ் தியேட்டரில் அதிக பட்சமாக 2 கோடியே 50 லட்சம் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. வேறு எந்தத் தியேட்டரிலும் இந்த அளவிற்கு வசூலிக்கவில்லை. அந்த சிறப்பு காரணமாக இன்று நடக்கும் 'விக்ரம்' படத்தின் 100வது நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள கமல்ஹாசன் கோவை சென்றுள்ளார்.
தமிழகத்தில் சென்னையில் உள்ள பிவிஆர், கோவையில் உள்ள கேஜி சினிமாஸ், தர்மபுரியில் உள்ள டிமேக்ஸ் டிஎன்சி ஆகிய மூன்று தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடிய 'விக்ரம்' படம் கோவை கேஜி சினிமாஸில் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.