செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் அலைப்பேசியை பறித்த ராணா
ADDED : 1116 days ago
பாகுபலி படங்கள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா டகுபட்டி. தற்போது தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராணா தனது குடும்பத்தினர் உடன் திருப்பதி எழுமலையான் கோயிலில் வழிபட்டார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபமான ராணா அவரின் அலைப்பேசியை பறித்தார். ராணாவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைலரானது.