10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து இசை நிகழ்ச்சி அறிவிப்பு
ADDED : 1117 days ago
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 7 ஆண்டுகளுக்கு பிறகு மலேஷியாவின் கோலாலம்பூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். டிஎம்ஒய் கிரியேசன் என்ற நிறுவனம் மூலம் இந்த நிகழ்ச்சி வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28ம் தேதி நடக்க உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் 10000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து வெளியிட்டனர். இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை. எனவே இந்த சாதனை 'மலேஷியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்' அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.