நடிகை ஜெயகுமாரிக்கு சிறப்பு சிகிச்சை: தமிழக அரசு ஏற்பாடு
ADDED : 1114 days ago
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெய்குமாரி. உறவினர்களும், பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தனித்துவிடப்பட்ட தனக்கு அரசு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து ஜெய்குமாரிக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று ஜெய்குமாரியை சந்தித்தார். அங்கு அவருக்கு நல்ல முறையில் உயர்சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகளை செய்தார். அவருக்கு பண உதவி செய்த அமைச்சர், முதியோர் உதவி தொகை வழங்கவும் ஏற்பாடு செய்தார்.