மீண்டும் இணையும் துல்கர் சல்மான் - மிர்ணாள் தாக்கூர்
ADDED : 1112 days ago
தெலுங்கில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திரைக்கும் வந்த படம் சீதா ராமம். ஹனு ராகவபுடி என்பவர் இயக்கிய இருந்தார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தியிலும் வரவேற்பு பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் 130 கோடி வசூலித்தது. ராணுவ வீரர் கடிதம் மூலம் காதல் வளர்க்கும் கதையில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் துல்கர் சல்மான் - மிருணாள் தாக்கூர் - ஹனு ராகவபுடி ஆகியோர் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.