அஜித் படத்தில் வில்லனா?: கவுதம் மேனன் விளக்கம்
ADDED : 1167 days ago
நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‛துணிவு' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் ‛ஏகே62' படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து கவுதம் மேனன் கூறுகையில், ‛விக்னேஷ் சிவன் எனது நெருங்கிய நண்பர். இதுவரை அந்த படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து எதையும் அவர் கூறவில்லை. ஆனால் இனிமேல் அவர் அந்த படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு கொண்டால் அந்த கேரக்டர் எனக்கு பொருத்தமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்த ‛என்னை அறிந்தால்' படத்தை கவுதம் மேனன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் ‛அதாரு அதாரு' பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார்.