குண்டக்க மண்டக்க பட இயக்குனர் அசோகன் காலமானார்
ADDED : 1118 days ago
தமிழச்சி, பொன்விழா, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட திரைப்படங்களுக்குக் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் எஸ். அசோகன். இவருக்கு ராஜலெட்சுமி என்ற மனைவியும், பகவத் கீதன் என்ற மகனும் உள்ளனர். சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன் மாரடைப்பால் சென்னையில் இன்று (செப்.,23) காலமானார். அவருக்கு வயது 64. அவரது உடல் சென்னையிலிருந்து எடுத்து வரப்பட்டு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை தெற்கு தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு பின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற உள்ளன.