சமந்தாவின் ‛சாகுந்தலம்' நவ.,4ல் வெளியீடு
ADDED : 1167 days ago
நடிகை சமந்தா சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். ருத்ரமாதேவி படப் புகழ் குணசேகரன், கதை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் மோகன் பாபு, கவுதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.