மதயானை கூட்டம் பட இயக்குனரின் படத்தில் கதாநாயகனாக சூரி
ADDED : 1156 days ago
முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்த சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'விடுதலை' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் சூரியுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சூரி மீண்டும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'மதயானை கூட்டம்' படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.