உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதிதாக கார் வாங்கிய ஆர்த்தி சுபாஷ் : வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்

புதிதாக கார் வாங்கிய ஆர்த்தி சுபாஷ் : வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்

ஒருகாலத்தில் சீரியல் நடிகர்கள் என்றாலே சினிமாவில் வாய்ப்பிழந்தவர்கள், திறமையில்லாதவர்கள் என்று தான் பலரும் கருதி வந்தனர். ஆனால், இன்று சின்னத்திரை நட்சத்திரங்களில் வளர்ச்சியானது சினிமா நடிகர்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு அபரிமிதமாக உள்ளது. ஒரு ப்ராஜெக்டில் நடித்தவர்கள் கூட கார், வீடு என செட்டிலாகி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தி சுபாஷும் இடம்பிடித்துள்ளார். 'பாண்டவர் இல்லம்' தொடரில் நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் அதே சேனலின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே சின்னத்திரை நேயர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீடியா கேரியரில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ள அவர், மோரிசன் கேரேஜ் கார் கம்பெனியின் ஏ-ஸ்டார் என்கிற சொகுசு வகை காரை வாங்கி தனது முதல் கனவை நனவாக்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தை பதிவிட்டுள்ள ஆர்த்திக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி அவரது கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் எனவும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !