உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட்டில் அறிமுகமான சரண்யா பொன்வண்ணன்

பாலிவுட்டில் அறிமுகமான சரண்யா பொன்வண்ணன்

தமிழில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த பிறகு அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன். ஹிந்தியில் இதுவரை நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள சுப் என்ற படத்தில் நடித்துள்ளார் சரண்யா பொன் வண்ணன். இந்த படம் மூலம் குணச்சித்திர நடிகையாக அவர் ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !