விஜய் ஆண்டனியின் ‛கொலை' படத்தில் சிவாஜி பாடல் ரீமிக்ஸ்
ADDED : 1106 days ago
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமர் நடிக்கும் கொலை படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி, துப்பறியும் நிபுணராக நடித்திருக்கிறார். ரித்திகா சிங், சந்தியா என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், பாலாஜி குமார் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 'புதிய பறவை' என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை 58 வருடங்களுக்கு பின்னர் ரீமிக்ஸ் செய்துள்ளனர். 1964ம் ஆண்டு சிவாஜி கணேசன், சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளியான ‛புதிய பறவை' படத்தில் இடம்பெற்ற ‛பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து தற்போது வீடியோவாக கொலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளனர்.