அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட கத்ரீனா கைப்
ADDED : 1115 days ago
பிரபல ஹிந்தி நடிகை கத்ரீனா கைப், கடந்த ஆண்டு இறுதியில் விக்கி கவுசலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகயில் தற்போது மெர்ரி கிறிஸ்துமஸ், டைகர் 3, போன் பூட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர கணவர் விக்கியுடன் இணைந்து கோவிந்தா நாம் மேரா, ரவுலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தற்போது நடிகை கத்ரீனா கைப் வந்துள்ளார். மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த அவர், விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'அரபிக்குத்து' பாடலுக்கு சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து நடனமாடினார். தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.