தனுசுடன் ஜோடி சேரும் சிம்பு பட நடிகை
ADDED : 1107 days ago
இளம் இயக்குனர் இளன் கடந்த 2015ம் வெளியான 'கிரகணம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கினார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தப்படியாக தனுஷுடன் கூட்டணி அமைத்து புதிய படம் ஒன்றை இளன் இயக்கவுள்ளார்.
காதல் கதையாக உருவாகும் இந்த படத்தில் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .இப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைக்கவுள்ளதாகவும் ,போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நடிகர் தனுஷ், 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கவுள்ளார். இதுதவிர அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'நானே வருவேன்', வாத்தி ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.