‛ஆளவந்தான்' புது வடிவம் பெற்றுள்ளது - தாணு
ADDED : 1147 days ago
2001ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் ஆளவந்தான். அவருடன் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்தனர். தாணு தயாரித்தார். இந்த படம் அப்போது வரவேற்பை பெறவில்லை. அந்த படத்தால் தயாரிப்பாளர் தாணு கடும் நஷ்டத்தை தழுவினார். இந்நிலையில் இந்த படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி ரீ-ரிலீஸ் செய்யபோவதாக தாணு கூறியிருந்தார்.
இதுபற்றி தாணு தற்போது ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛அந்த ஆளவந்தான் கமல் சார் படம். இப்போது ரிலீஸாக போகும் ஆளவந்தான் படத்தை நீங்க பார்த்த பிறகு சொல்லுங்க. அந்த சமயத்தில் கமல் அமைத்த திரைக்கதை தவறாகிவிட்டது. இப்போது வெளியாகும் படத்தால் நான் இழந்த பணத்தை கூட மீட்கலாம். 2 மணிநேர படமாக புது வடிவம் பெற்றுள்ளது. தல தெறிக்க ஓடப்போகிறது'' என்றார்.