மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1099 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1099 days ago
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறியுள்ள ராஷ்மிகா தற்போது பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்து குட்பை மற்றும் மிஷன் மஞ்சு என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். இதில் விகாஸ் பாய் இயக்கத்தில் உருவாகியுள்ள குட்பை திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் குடும்பப்பாங்கான அம்சத்துடன் உருவாகியுள்ளது. அந்தவகையில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா.
இதன் ஒரு அம்சமாக மும்பையில் பிரமாண்டமான நவராத்திரி கொண்டாட்டம் ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி பல்குனி பதக்குடன் இணைந்து கலந்துகொண்டார் ராஷ்மிகா. இந்த நிகழ்வின்போது நடைபெற்ற தாண்டியா ஆட்டத்துடன் அழகான ஒரு மாலைப்பொழுதை செலவழித்தது மிக்க மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
1099 days ago
1099 days ago