நானே வருவேன் முதல்நாள் வசூல் கணக்கு
ADDED : 1104 days ago
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் நானே வருவேன். இந்துஜா, எல்லி அவ்ரம், பிரபு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைக்கலாஜிக்கல் கலந்த திரில்லர் படமாக புதிய கதையில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி இந்த படத்திற்கு முதல்நாளிலேயே நல்ல வசூல் கிடைத்துள்ளது. இந்த படம் முதல்நாளில் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. படத்திற்கு கிடைத்த பாராட்டு, வசூலால் நெகிழ்ந்த இதன் தயாரிப்பாளர் தாணு, நேரில் சென்று செல்வராகவனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.